அஜீத் நடித்த ‘வீரம்' படத்தை இயக்கினார் சிறுத்தை சிவா. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்' படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு ஹீரோயின் தேடுகிறார்கள் என்ற தகவல் தமன்னா காதில் எட்டியது. உடனே அவர் சிவாவை தொடர்பு கொண்டு, ‘வீரம் படத்தில் ஜமாய்தததுபோல் இப்படத்திலும் ஜமாய்த்துவிடலாம்‘ என்று படத்தின் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக பொடிபோட்டுப் பேசினாராம். ஆனால் இயக்குனரோ அவரது தந்திரத்தில் சிக்கிவிடாமல். 'இப்படத்தில் தனது புது காம்பினேஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஜீத் விரும்புகிறார்.
அதனால் இப்படத்தில் நீங்கள் இடம்பெற வாய்ப்பில்லை' என்று நாசுக்காக சொல்லிவிட்டாராம். இதில் அப்செட் ஆகி இருக்கிறார் தமன்னா. சிவாவின் முதல் படமான சிறுத்தையில் தமன்னாதான் நடித்தார். அதைத் தொடர்ந்து வீரம் படத்திலும் இடம்பெற்றார். ஹாட்ரிக் அடிக்கலாம் என எண்ணி இருந்தவர் அதிர்ச்சி அடைந்தாராம். தற்போது ஆர்யாவுடன் தமன்னா நடித்து வருகிறார். ஆரம்பம் படத்தில் நடித்த பிறகு அஜீத்துக்கு நல்ல நண்பராக ஆர்யா மாறிப்போனார். இதனால் ஆர்யா மூலம் காரியத்தை சாதிக்க முடியுமா என்று பார் என தமன்னாவுக்கு அவரது தோழிகள் அட்வைஸ் செய்கிறார்களாம். வழக்கமாக ஹீரோயின்களுக்கு தனது ஓட்டல் பிரியாணியை கொடுத்துதான் ஆர்யா நட்பை வளர்ப்பார். அவரிடம், 'பிரியாணி வேண்டாம், அஜீத் பட வாய்ப்புக்கு சிபாரிசு பண்ணுங்க' என கேட்க தமன்னா யோசித்துள்ளாராம். இதற்கிடையில் இந்த வாய்ப்பை தட்டிப் பறிக்க மேலும் சில ஹீரோயின்களும் முயன்று வருகிறார்கள்.அதே சமயம், ஸ்ருதி ஹாசனை இப்படத்தில் நடிக்க வைப்பது பற்றி இயக்குனரும், அஜீத்தும் ஆலோசித்து வருகிறார்களாம்.

0 comments :
Post a Comment