நடிகர் அஜித்தின் மறைக்கப்பட்ட உண்மையான முகம் !



சமீபத்தில் நடிகர் அஜித் அப்புகுட்டியை வைத்து குறும்படம் (SHORT FILM) இயக்க போவதாகவும்,  அஜித் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் என்றும் அஜித்தையே சிரிப்பூட்டும் வகையில்  பல வலை தளங்களில் வதந்தியான  தகவல்கள் வெளியானது.  இது ஒரு புறமிருக்க அப்புக்குட்டியை வைத்து அஜித் எடுத்த போட்டோஷூட் போட்டோக்கள் வெளியாக போவதாக வலை தளங்களில் மீண்டும் பரப்ப பட்டது. இதனை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அஜித் போட்டோஷூட் ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அஜித் பொதுவாக அவரது படங்கள் தொடர் தொல்வி அடையும் போது சினிமா துறையில் தனது இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக கார் ரேஸ், பைக் ரேஸ், சிம்ப்ளிசிட்டி என கூறி இது போன்ற போட்டோக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடி கொள்வது வழக்கம்.

கடந்த வருடமும் இதே போல் அஜித் ரேஸ் ஆடையுடன் சாலையோர டீ கடையில் டீ அருந்துவது போன்றும், பைக் ஓட்டுவது போன்றும் பல போட்டோக்கள் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னர் ஓட்டு சாவடியில் வரிசையில் நின்று போஸ் கொடுப்பது, ரிமோட் ஹெலிகொப்டரை இயக்குவது போல் போஸ் கொடுப்பது, சுண்டு விரலில் சின்ன காயம்பட்டால் கூட அதையும் போட்டோ பிடித்து வெளியிடுவது  என இவர் அடிக்கும் பப்ளிசிட்டி லூட்டிகளை அடுக்கி கொண்டே போகலாம். அஜித் இப்படி இருக்க அவரது ரசிகமணிகள் செய்யும் கூத்து அதை விட கொடுமையானது  ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செருப்பு அணிந்து போஸ் கொடுப்பது, அஜித் உணவு உண்ணுவது,  போன்ற சாதாரண விஷயங்களை கூட அஜித் தன் கையாலேயே சாப்பாடு சாப்பிடுகிறார், அஜித் செருப்பு போட்ருக்கார், அஜீத் பற்றி CBSE பாடப்புத்தகத்துல வந்துருக்கு, அஜித் கிட்ட பைலட் லைசன்ஸ் இருக்கு, அஜித் வெளிய தெரியாம உதவி பண்றார்  "மேன் ஆப் சிம்ப்ளிசிட்டி டாவ்" என்று அவரது ரசிகர்கள் பேஸ்புக் வலை தளத்தில் செய்யும் அலப்பரைகள் கட்டுகடங்காதது. அன்றாடம் சாப்பாடிற்கே அல்லாடும் பல குடும்பம் இருக்கையில் தனது டிரைவர்க்கு  ஐ போன், மேக்கப் மேன்க்கு பல்சர் , தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு கிப்ட் கொடுப்பது. இது தான் வெளிய தெரியாம அவர் செய்த உதவிகள். இந்த வரிசையில் அஜித்தின் இந்த வருட பப்ளிசிட்டி ஸ்டன்ட் தான் "அப்புக்குட்டி போட்டோகிராபி" போட்டோஷூட் என்னவோ அப்புக்குட்டிக்கு தான் ஆனால் வெளியான 50 க்கும் மேற்பட்ட போட்டோக்களில் அப்புக்குட்டி போட்டாக்கள்அதிகபட்சம் 10 போட்டோக்கள் மட்டுமே. மீதி போட்டோக்கள் அனைத்தும் அஜித் போட்டோக்களாகவே காண முடிகிறது. அஜித்தின் இந்த பப்ளிசிட்டி மோகத்திற்கு காரணம் அவரது தொடர் தோல்விகளே ஆகும். தனது சுயநலத்திற்காக இவ்வளவு பப்ளிசிட்டி  திருவிளையாடல்களை  நிகழ்த்தும் அஜித் ஒரு போதும் தனது படங்களின் பப்ளிசிட்டி ப்ரோமோஷனுக்கு  ஒத்துழைத்தது இல்லை. தன்னை நம்பி கோடி கோடியாக பணம் போட்டு படம் பண்ணும் அப்பாவி தயாரிப்பாளர்கள் பற்றி எவ்விதமான கவலையும் இவருக்கு இல்லை. பொதுவாக அஜித்திடம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டால் அஜித் நல்ல மனிதன், அஜித் சிம்பிளிசிட்டி என்றே பெரும்பாலான ரசிகர்கள் கூறுகின்றனர். எந்த ஒரு ரசிகனும் அஜித்தின் திறமையை ரசிக்கவில்லை. அஜித் மற்றும் அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட நல்ல மனிதன் என்கிற போலியான பிம்பத்தையே ரசிக்கின்றனர்.  ஒரு அஜித் ரசிகராக வேண்டுமானால் இதை ஏற்க உங்கள் மனம் மறுக்கலாம் ஆனால் இதுவே நிதர்சமான உண்மையாகும்.

இந்த தொகுப்பு பிடித்திருந்தால் கீழே உள்ள  பட்டனை அழுத்தி பகிருங்கள்.
↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment