பிரபல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் பேட்டியில் நடிகர் அஜித்தை மானபங்கம்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றே.
கவுதம் மேனன் ஒரு பேட்டியில் தல-னா யாரு ? எனக்கு தெரியாதே என்று கூறினார். நடிகை ஸ்ரீ திவ்யா அஜித்துடன் நடிக்க மாட்டேன் அவருக்கும் வயசு அதிகம் என்று அசிங்கபடுதினார். சமந்தா, சந்தானம், ஏ.எம்.ரத்னம், உதயநிதி ஸ்டாலின், லிங்குசாமி, லக்ஷ்மி மேனன் என அஜித்தை கேலி செய்தவர்கள் எண்ணிக்கை ரெயில்பெட்டி போல் நீண்டுகொண்டே போகும்.
சரி அது ஒருபுறம் இருக்கட்டும். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் BEHINDWOODS வலைதளத்திற்கு அளித்த பேட்டி அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். பிரபல சினமா வலைதளமான BEHINDWOODS வலைதளத்தின் நிருபர் சில ருசிகரமான கேள்விகளை முன்வைத்தார். அதில் தங்களது முதல் படமான தீனா படத்தில் அஜித்தின் கேரக்டருக்கு தல என்கிற பெயர் எவ்வாறு உருவாகியது என கேள்வி எழுப்பினார். பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது தல என்கிற பெயர் லோக்கல் ரௌடிகள், பொறுக்கிகள் மற்றும் கொல்லை கூட்ட தலைவனை தல என்று அழைத்தார்கள் அதை தான் அஜித்திற்கு வைத்தேன் என்று கூறியதோடு இல்லாமல் தீனா படத்தால் எனக்கு சுத்தமாக பெயர் கிடைக்கவில்லை ரமணா படம் தான் பெயர் வாங்கி கொடுத்தது என்று பகிரங்கமாக கூறினார். அஜித்தை பற்றி கேள்வி எழுப்பியதும் எரிச்சலுடன் ஆவேசாமாக பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் பற்றி நிருபர் கேள்வி எழுப்பியவுடன் முகம் நிறைந்த புன்னகையுடன் இளையதளபதியை மாஸ் ஹீரோ, சூப்பர்ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளினார். ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுப்பாரா என்று நீண்ட காலமாக ஏங்கி கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு முருகதாஸ் அளித்த பேட்டியானது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாம்.
(சரி விடுங்க bossu அதுவா பழகிடும்)

asinga paduthitaaru
ReplyDelete