என்னை அறிந்தால் இந்தப் படத்திலிருந்து தான் திருடப்பட்டது! கையும் களவுமாக சிக்கினார் கௌதம் மேனன்..!

மின்னலே படத்தில் இயக்குநராக அறிமுகமான காலம் தொட்டே கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். கதைக்காக அலட்டிக்கொள்ள வேண்டாம்...! ஏதாவது ஒரு டிவிடியைப் பார்த்து கதையை சுட்டுவிடலாம்..! என்பதே அது. அவர் இதுவரை இயக்கிய அத்தனை படங்களுமே நம் மக்களுக்கு அன்னியமாக மட்டுமல்ல, ஆங்கிலப்படம் பார்ப்பது போன்று இருப்பதன் பின்னணியும் கூட இதுதான். கௌதம் வாசுதேவ் மேனனின் படங்கள் ஆங்கிலப்படம் பார்ப்பது போல் அல்ல, ஆங்கிலப்படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது என்ற உண்மை, விவரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இதற்கு அவரது சமீபத்திய படமான என்னை அறிந்தால் படமும் விதிவிலக்கில்லை! உடல் உறுப்புகளை திருடும் வில்லன் கோஷ்டி.... ஒரு குழந்தை உடன் இருக்கும் கதாநாயகன்... என்பதுதான் என்னை அறிந்தால் படத்தின் அடிநாதம். இந்த இரண்டு விஷயங்களை வைத்தே என்னை அறிந்தால் படத்தின் திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த விஷயங்கள் எல்லாம் கௌதம் மேனனின் சிந்தனையில் உதித்தவை அல்ல....! 2010 ஆம் ஆண்டு வெளியான த மேன் ஃப்ரம் நோவேர் (The Man from Nowhere ) என்ற கொரியப்படத்திலிருந்து திருடப்பட்டவை. கிராண்ட்பெல் அவார்ட்ஸ், ஃபிலடெல்பியா அவார்ட்ஸ், கொரியன் அவார்ட்ஸ், புளூ டிராகன் அவார்ட்ஸ் உட்பட 14 சர்வதேசதிரைப்படவி££க்களில் 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற படம்தான் - த மேன் ஃப்ரம் நோவேர். விருதுகள் வென்றது மட்டுமல்ல, வணிகரீதியிலும் தென்கொரியாவில் மிகப்பெரிய சாதனை படைத்த படமும் கூட. இந்தப் படத்திலிருந்துதான் கதையைத் திருடி வடை சுட்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்...! புத்தரோட பேரை வச்சுக்கிட்டு....."
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment