அஜித்தின் என்னை அறிந்தால் இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலாக ரூ14.05 கோடி ஈட்டி உள்ளது.
அஜித் நடித்த என்னை அறிந்தால் உலகம் முழுவதும் கடந்த் 5-ந்தேதி ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் 10.80 கோடி வசூல் செய்து உள்ளது. ரஜினிகாந்தின் லிங்கா ரூ.12.8 கோடியும், விஜயின் கத்தி படம் ரூ.12.5 கோடியும் வசூல் செய்து உள்ளன.
கேரளாவில் 107 தியேட்டர்களில் இப்படம் வெளியானது அங்கு ரூ 1.65 கோடி வசூல் செய்து உள்ளது.இங்கு ஐ படம் முதல் நாள் 2.5 கோடி வசூல் செய்து உள்ளது. அதுபோல் விஜயின் கத்தி ரூ.2.07 கோடி வசூல் செய்து உள்ளது.
பெங்களூரில் என்னை அறிந்தால் 39 திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் 200 காட்சிகளில் 70 சதவீதம் நல்ல வரவேற்பை பெற்றது.பெங்களூரில் முதல் நாள் வசூலாக ரூ1.71 கோடி வசூல் செய்து உள்ளது. கர்நாடகாவில் ரூ.2 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.8 கோடியும் என மொத்தம் கிட்டத்தட்ட 20 கோடி வரை வசூலித்து உள்ளது.
சமீபத்தில் வெளியான் படங்களின் சாதனைகளை முறியடிக்க என்னை அறிந்தால் தவறி விட்டது. ரஜினிகாந்தின் லிங்கா தமிழ் மொழி வெளியீடு ரூ.18.3 கோடி வசூல் செய்து உள்ளது. விஜயின் கத்தி 17 கோடி வசூல் செய்து உள்ளது. விக்ரமின் ஐ படம் ரூ.15.1 கோடி வசூல் செய்து உள்ளது. சூர்யாவின் அஞ்சான் ரூ.10.08 கோடி வசூல் செய்து உள்ளது
உலக அளவில் ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா' படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ' ரூ.27 கோடி வசூல் செய்து 2-வது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி' ரூ.23 கோடி வசூல் செய்து 3-வது இடத்திலும் உள்ளது

0 comments :
Post a Comment