#GetWellSoonMentalSimbhu

நீண்ட நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார் சிம்பு. சர்ச்சையில் இல்லாமல் இருப்பது அவருக்கே போர் அடித்துவிட்டது போலும். அதனாலேயே இன்று அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை பார்த்த சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என ட்வீட் செய்துள்ளார். இதை 830 பேர் இதுவரை ரீட்வீட் செய்துள்ளனர். பிடிக்கவில்லை என்றால் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம் என, தற்போது இந்த ட்வீட்டிற்கு பலர் பதிலளித்து வருகின்றனர். அதோடு விஜய்,சூர்யா மற்றும் தனுஷ்  ரசிகர்கள் #GetWellSoonMentalSimbhu என்ற ஆஷ்டாக்கை ஓபன் செய்து டிரன்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த ஆஷ்டாக் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment