என் காதலை நானே அழித்து விட்டேன் - சோகத்தில் ஸ்ருதிஹாசன்


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என காலில் சக்கரம் கட்டி நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இத்தனை பிஸியான நேரத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் உங்ககிட்ட உங்களுக்கே பிடிக்காத குணம் எது? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு 72 கிலோ இருந்தேன், படத்தில் நடிப்பது என்று முடிவு செய்த பிறகு 12 கிலோ குறைத்தேன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடிப்பதால் அதற்கு ஏற்ற உடல் அமைப்பை பராமரித்து வருகிறேன். ஆனால், அப்படியிருந்தும் ஒரு சில நேரங்களில் என்னையும் மீறி சாப்பிடுகிறேன்.
ஏனெனில் எனக்கு சாப்பாடு மேல் அப்படி ஒரு காதல், ஆனால், சினிமாவிற்காக அந்த காதலை அழித்து விட்டேன்’ என்று சோகமாக கூறியுள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment