நடிகர் விஜய் மற்றும் சரத்குமாருடன் லிங்கா பட விநியோகஸ்தர் சிங்காரவேலன் திடீர் சந்திப்பு


















லிங்கா’ திரைப்படத்தின்  திருச்சி – தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலனும், நடிகர் விஜயும் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்கா பட பிரச்னையில் இரண்டு முக்கிய நடிகர்கள், பணம் தரக்கூடாது என்று சூப்பர் ஸ்டாரிடம் கூறியதாக கடந்த வாரம் சிங்காரவேலன் பகிரங்க குற்றச்சாட்டு கூறியிருந்தார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் நடிகர் விஜய் தான் என்று பலரும் யூகங்களைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தனர். ஆகையால் ஐந்து நாட்களுக்கு முன்பு சரத்குமாரை சந்தித்துப் பேசியிருந்தார் சிங்காரவேலன். இந்நிலையில் நடிகர் விஜயையும் அவர் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment