என்னை அறிந்தால் : சத்யதேவ் அஜித்தின் உண்மையான கதாபாத்திரம்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் நடிகர் அருண் விஜய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், திரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாலைமலர்.காம் நேயர்களுக்காக அருண் விஜய் அளித்த பேட்டி வருமாறு: 

‘என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். என்னையே வேற மாதிரி பார்க்கக்கூடிய கதாபாத்திரம். என்மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு, இயக்குனர் கவுதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

அதுமட்டுமில்லாமல், இவ்வளவு பெரிய டீமுடன் பணிபுரிவது இதுதான் முதல்முறை. அதனால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு வாய்ப்புக்காகத்தான் இத்தனை வருஷம் காத்துக் கொண்டு இருந்தேன். 

இப்படத்தில் ரசிகர்கள் என்னை வேறுமாதிரியான தோற்றத்தில் பார்ப்பார்கள். அதுமட்டுமில்லாமல், என்னையே வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரமாக இது அமைந்தது. படம் முடிந்தும் இந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர 1 மாதங்கள் ஆயிற்று. 

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய பெருமை. அவர் ரொம்பவும் ஜாலியான நபர். இந்த படத்தில் அஜித் நடித்துள்ள சத்யதேவ் கதாபாத்திரம், அவருடைய உண்மையான கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். அந்த அளவுக்கு கவுதம் மேனன் அவருடைய கதாபாத்திரத்தை செதுக்கியுள்ளார். அஜித் எப்போதும் எல்லோரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். 

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment