நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிம்பு

சிம்புவும்-நயன்தாராவும் முன்னாள் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். இருப்பினும், தற்போது மீண்டும் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கி வருகிறார். 

இந்நிலையில், நேற்று சிம்பு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். தனது பிறந்தநாளில் நெருங்கிய, திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து, கொண்டாடுவது சிம்புவின் வழக்கம். அதுபோல், நேற்றும் தனது நெருங்கிய நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் பார்ட்டி வைத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சிம்பு. 

இந்த பார்ட்டியில், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், சிம்புவின் முன்னாள் காதலியும், நடிகையுமான நயன்தாராவும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். பார்ட்டியில் சிம்பு, நயன்தாரா தோள்மீது கை போட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment