பிரபல பாலிவுட் நடிகரிடம் பல்பு வாங்கிய அஜித் ரசிகர்கள்


சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர்  கமால் ஆர் கான் அஜித்தை கிண்டல் செய்து ட்வீட் செய்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ட்விட்டரில்
வலைதளத்தில் உள்ள பிரபலங்களிடம் நடிகர் அஜித்த்தை பற்றி எதாவது கூறுங்கள், கூறுங்கள் என அடிகடி தொந்தரவு செய்து வலுகட்டாயமாக அவர்களை நடிகர் அஜித் பற்றி பெருமையாக பேச வைப்பதில் கைத்தேர்ந்தவர்கள். அதே பாணியில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்தை பற்றி எதாவது கூறுங்கள் என சமீபத்தில் அந்த பாலிவுட் நடிகரிடம் கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். இதனால் கடுப்பாகி போன கமல் ஆர் கான் "அஜித் பார்க்க (Security Guard) காவலாளி போன்று இருக்கிறார் என்றும் இவரையெல்லாம் தென்னிந்திய மக்கள் எப்படி ஒரு நடிகராக ஏற்றுகொள்வார்கள்" என்றும் பதில் அளித்துள்ளார். எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளான அஜித் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இது போன்று நடிகை குஷ்பூ, நடிகர் அரவிந்த்சாமி, பாடகி சின்மயி என பல பிரபலங்களிடம் பலமுறை அஜித் ரசிகர்கள் வாயை கொடுத்து அசிங்கப்பட்டு இருக்கிறார்கள்  என்பது  குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment