சன் டிவியில் அனேகன் - தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை கொண்டாடிய அனேகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்த தனுஷ் ரசிகர்கள் #StopAneganPremiereSunTV எனும் ஹேஷ் டேக்கை டிவிட்டரில் உருவாக்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

மேலும் தனுஷிடமும் இதுகுறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த தனுஷ், ” நான் எனது ரசிகர்களை பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் தொடர்பான எந்த விஷயமும் எனக்கு தெரியாது. எனவே இதுகுறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. எனினும் இது ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். இதனை
இப்போது ஒளிப்பரப்பினாலும் பலரும் ரசிப்பார்கள்” என கூறினார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment