என்னை அறிந்தால் தோல்வி - ஒரு அஜித் ரசிகனின் குமுறல்

அன்புள்ள அஜித்குமார் அவர்களுக்கு..,
தங்களின் மிக மிக மிக மிக மிக மிக தீவிரமான ரசிகன் நான்...., அதே தீவிர தீவிர தீவிர தீவிரமாக உங்களின் "என்னை அறிந்தால்" படம் பார்க்க சென்றேன் (FDFS)...., படம் ஹிட்டு, அது இதுன்னு சொல்றாங்க..., ஆனா ஒங்க ரசிகர இந்த படத்தின் முதல் பாதியை பார்ப்பதற்கு பதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி என்ற காவியத்தை(!) பார்த்து தொலைக்கலாம்...,
நீங்கள் பேசுகிறீர்கள், பின் த்ரிஷா பேசுகிறார்...,
பின் நீங்கள் பேசுகிறீர்கள், பின் த்ரிஷா பேசுகிறார்...,
பின் நீங்கள் பேசுகிறீர்கள், பின் த்ரிஷா பேசுகிறார்..., என்ன தாங்க நினைச்சுட்டு இருக்கீங்க...,
கேள்விப்பட்டேன்....., உங்கள் பின்னால் நாயை விட கேவலமாக அலையும் உங்களின் ரசிகர்கள் எங்களை திருப்திப்படுத்த இயக்குநர் மேனன் சில காட்சிகள் அமைத்தாராம்..., நீங்கள் தான் பெரிய மனது பண்ணி அதெல்லாம் வேண்டாம் என்று அவர் போக்கிலேயே படத்தை நகர்த்த சொன்னீர்களாம்..., அதுதான் இந்த இரண்டாம் Paragraph'ன் ஆரம்பத்தில் இருக்கிறது...,
நீங்கள் அருண் விஜய் மற்றும் பாழாய்போன மேனன், தெருவில் திரியும் நாய் என யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கொடுத்து தூக்கி விடுங்கள்...., ஆனால் அதற்கு முன் எங்களை (உங்க Fans/followers/ etc) பற்றி கொஞ்சம் யோசியுங்கள்...,
ஒருவருடம் கழித்து உங்களை திரையில் பார்க்க, ரசிகர் மன்றம் கலைத்த பின்பும் சொந்த காசு செலவு செய்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் Banner/poster அடித்து அதிகாலை Alarm வைத்து ஒருநாள் சம்பளம்/கூலியை விட்டு பட்டினி கிடந்து உங்களை பார்க்க வரும் ரசிகர்களை Screen'ல் உங்களின் ஆளுமை திருப்தி படுத்த வேண்டாமா.?
ஆனால் அதற்கு மாறாக படு மொக்கையான உங்களின் அறிமுக காட்சியிலேயே எங்களை ஏமாற்றி விடுகிறீர்கள்...., யோவ்..., மனசாட்சி தொட்டு சொல்லுய்யா...., நீ த்ரிஷா கிட்ட வசனம் பேசறத பாக்கவா நாங்க இங்க Facebook/tweeterல உசுரு போற மாதிரி உன் படத்த trend பண்ணிட்டு இருக்கோம்..?
அந்தேwhite shirt போட்டு bullet ஓட்டும் sceneஅ காமிச்சு தான உங்க படத்தின் teaser உலக அளவில் trend ஆச்சு...., ஆனா அந்த கௌதம் அந்த costumeல உங்கள 10sec கூட காமிக்கல...
என் கூட படத்துக்கு வந்த ஒரு ஆளே கிட்டத்தட்ட 4000 செலவு செய்தார் உங்க பட release அன்னைக்கு..., ஆனா நீங்க உங்க இஷ்டத்துக்கு மேனன் மற்றும் அருண் விஜய்ய score பண்ண விட்டுட்டு ஓரமா போய் குழந்தைய கொஞ்சிட்டு இருக்கீங்க...,
கடைசி 40நிமிஷம் தான் படம்..., ஆனா அதுல கூட அருண் விஜய் domination தான் கெத்து..., கௌதம் உங்கள தக்காளி தொக்கு ஆக்கினாரு.., உங்கள நம்பி நாங்க தக்காளி தொக்கா ஆகிட்டோம்...,
உங்களோட அந்த திரை ஆளுமை, ஆம் அந்த "திரை ஆளுமையை" பார்க்க தான் நாங்கள் உங்களை பார்க்க உங்களுக்காக மட்டும் தியேட்டருக்கு வருகின்றோம்.....,
ஒன்னு தெரிஞ்சுக்கோங்க தல...,நீங்க வேணா புத்தரா இருக்கலாம்..., ஆனா நீங்க ஹிட்லரா இருந்த காலத்தில் இருந்தே நாங்க உங்க ரசிகர்கள்...., உங்களை ஒருமையில் பேசியதற்காக கூட இருக்கும் நண்பர்களை (நண்பர்களையே) பகைத்த பலரை எனக்கு தெரியும்...., அவர்களை அறிந்தால் நீங்கள் " என்னை அறிந்தாலில் நடித்திருக்க மாட்டீர்கள்..
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment