விஜய் நடித்த 'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணையும் மகேஷ்பாபு-மோகன்லால்

விஜய் நடித்த 'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா மற்றும் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார்கள் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனரான நேசன் தெலுங்கில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று நேசனை அழைத்து பேசியதாகவும், நேசன் கூறிய கதை அந்த நிறுவனத்திற்கு பிடித்துவிட்டதால் படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் மோகன்லால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ்பாபுவும் மோகன்லாலும் இணைவதால் இந்த படம் ஜில்லா  படத்தின் ரீமேக் என்று தவறாக செய்தி வெளிவருவதாகவும், ஆனால் இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது என்றும் நேசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படம் ஜில்லா 2 ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

விரைவில் நேசனும், மகேஷ்பாபுவும் சந்திக்க உள்ளதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறாது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment