என்னை அறிந்தால் படுதோல்வி, தயாரிப்பாளர் மௌனத்தின் அதிர்ச்சி பின்னணி


நடிகர் அஜித்குமார் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் A, B, C என அனைத்து செண்டர்களிலும் படுதோல்வி அடைந்தது. சமீபத்தில்  வெளியான லிங்கா திரைப்படம் நல்ல வசூலை பெற்று தந்தும் சில விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்துகையில் என்னை அறிந்தால் படுதோல்வி அடைந்தும் விநியோகஸ்தர்கள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் மௌனத்திற்கான பின்னணி ரகசியங்கள் பெறும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.
நடிகர் அஜித்தின் கடைசியாக வெளியான சில படங்கள் சரிவர ஓடாத காரணங்களால் என்னை அறிந்தால் திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை. பிரபல நடிகர்களின் திரைபடங்கள் படபிடிப்பு துவங்கிய ஓரிரு நாட்களில் விற்றுவிடும் நிலையில் என்னை அறிந்தால் திரைபடம் ரிலீஸ்க்கு 10 நாட்களுக்கு முன்னர் வரை வெறும் சென்னை விநியோக உரிமை மட்டுமே விற்பனையானது. அதாவது விநியோகஸ்தர்கள் மற்றும் இன்றி திரையரங்க உரிமையாளர்களும் இப்படத்தை வாங்க முன்வரவில்லை.பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய திரைப்படம் பிப் 5 ஆம் தேதிக்கு தள்ளி போனதற்கான  காரணமும் இதுவே. இதனால் சென்னை காசி திரையரங்கில் என்னை அறிந்தால் திரைப்படத்தை வாங்க கோரி அஜித் ரசிகர்கள் நடிகர் விக்ரமின் ஐ பட பேனர்களை கிழித்து போராட்டம் செய்து போலீசிடம் உதை வாங்கி படத்தை வாங்க வைத்தனர். இது போன்று இப்படத்தின் வியாபாரத்திலேயே பெரும் குளறுபடிகள் ஏற்பட்டது .
இதையெல்லாம் கடந்து  பலத்த எதிர்பார்ப்புடன் பிப் 5 ஆம் தேதி வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் முதல் நாளில் வசூலை வாரி குவித்தாலும் இரண்டாம் நாள் முதலே பெரும்பாலான திரையரங்கங்கள் வெறிசோட துவங்கின. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான அனேகன் திரைப்படமும் இப்படத்திற்கு எமனாக அமைந்தது. முதல் வார இறுதியிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் என்னை அறிந்தால் திரைப்படம் நீக்கப்பட்டது.

பெரும் நஷ்டதிற்குள்ளான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இன்னும் வாய்த்திறக்காததர்கான காரணம் நடிகர் அஜித்தின் சூழ்ச்சியே ஆகும். அதாவது இத்திரைப்படத்தால் தயாரிப்பாளர் தரப்பில் மட்டும் சுமார் 16 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தினை ஈடு கட்டுவதற்காக அஜித் கால்ஷீட் வழங்குவதாக உறுதியளித்துள்ளாராம். இதன் காரணமாகவே தயாரிப்பாளர் எ.எம்.ரத்னமும் விட்ட பணத்தை அடுத்த படத்திலாவது பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருக்கிறாராம்.
இதற்க்கு முன்னர் 2013ல் ஏ.எம்.ரத்னம் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான ஆரம்பம் திரைப்படதின் படுதோல்வியின் காரணமாக அஜித் இதே பாணியில் என்னை அறிந்தால் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இப்போது இந்த படமும் தோல்வி அடைந்ததால் கண்டிப்பாக அஜித்தின் ஓரிரு படங்களுக்கு பிறகு .எம்.ரத்னம் தயாரிப்பில் மீண்டும் நடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

1 comments :

  1. ! Poda jaldra vijay paki website name a jaltra vijay nu mathikanga da

    ReplyDelete