விஜய்யை பாராட்டிய ராகவா லாரன்ஸ்


ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம் காஞ்சனா 2. இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
காஞ்சனா 2 படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது ராகவா லாரன்ஸூக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மூன்று மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தது நாம் அனைவருக்குமே தெரியும்.

அந்நேரம் லாரன்ஸ் அவர்களுக்கு ஆதரவாக விஜய் தான் இருந்தாராம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த போது விஜய் அவர்கள் எனக்கு போன் செய்திருந்தார். என்ன நண்பா உடம்பு சரியில்லையாமே என்று செல்லமாக கேட்டார், அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
அதோடு உடம்பு எல்லாம் எப்படி இருக்கிறது, ஏதாவது உதவி வேண்டுமே என்றெல்லாம் விஜய் கேட்டார் என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment