நடிகர் அஜித்தை கலாய்த்து தள்ளிய விஜய் ரசிகர்

ஜூன் 22 இளையதளபதி விஜயின் 42வது பிறந்தநாளை நற்பணி தினமாக விஜய் ரசிகர்கள் அன்னதானம், உடலுறுப்பு தானம், பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் விஜய் பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பல்வேறு நலஉதவிகளை செய்து கொண்டாடினர். மேலும் இளையதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, இலங்கை என பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் விஜயின் தலைவா, கத்தி, போக்கிரி படங்கள் சிறப்பு காட்சிகளாக போடப்பட்டன. சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி சினிமாஸ் தியேட்டரில் கத்தி திரைப்படத்தின் சிறப்பு காட்சி போடப்பட்டது. விஜய் பிறந்தநாளை தியேட்டரில் கொண்டாட வந்த ரசிகர்கள் கத்தி படத்தின் இடைவேளையின் போது அஜித்தை பதம் பார்த்தனர். அதாவது சமீப காலமாக நடிகர் அஜித் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவற்றில் ஒரு கேலிப்பொருளாக உருவானது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு முழு காரணம் யாரென்றால் அஜித் ரசிகர்கள் மட்டும் தான். எவ்வளவு பெரிய விரோதியானாலும் ஒருவர் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்துவதே தமிழனின் பண்பாட்டு மற்றும் மனிதத்தன்மை. ஆனால் மூடர்களான அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் முந்தைய வருடம் விஜயை இழிவு படுத்தி ஒரு TAG ட்ரெண்ட் செய்தார்கள். இதற்கு கடந்த அஜித் பிறந்தநாள் அன்று விஜய் ரசிகர்கள் அஜித்தை கேலி செய்யும் விதமாக ஒரு TAG-ஐ உருவாக்கி அன்றைய தினம் முழுவதும் ட்ரெண்ட் செய்து பழிதீர்த்தனர். இப்படி மனிதத்தன்மை இல்லாமல் செயல்படும் அஜித் ரசிகர்களின் வீர சவடால்கள் அனைத்தும் முகம் காண முடியாத FACEBOOK, TWITTER வலைத்தளங்களில் மட்டுமே. இத்தகைய கோமாளிகளின் கீழ்த்தனமா வேலைகளால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர் ஒருவர் நேற்று (JUNE 22 2016) அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் கத்தி திரைப்படத்தின் இடைவேளையின் போது அஜித்தை கேலிசெய்து அதனை செல்போனிலும் படம்பிடித்து YOUTUBEல் வெளியிட்டு இருக்கிறார். முதலில் சாதாரணமாக தனது ஓரிரு நண்பர்களுடன் இருக்கையில் அமர்ந்து விளையாட்டாக கேலிசெய்ய ஆரமித்தவரின் பேச்சு மிகவும் ரசிக்கும்படியாகவும், எவ்வித திறமையும் இல்லாத நடிகர் அஜித், விஜயுடன் ஒப்பிட தகுதியானவரா என்று அவர் மெய்பட பேசிய ஒவ்வொரு விஷயமும் அங்கிருந்த விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் ஒரு சில நொடிகளில் தியேட்டரில் இருந்த அனைத்து ரசிகர்களும் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். இடையில் ஒரு பெண் ரசிகையும் அஜித்தை கிண்டல் செய்தது வியப்பில் ஆழ்த்தியது. அஜித் ரசிகர்களை போல் சராமரியாக கெட்டவார்த்தையில் திட்டி உலராமல் பல்வேறு கருத்துக்கள், உண்மைகளை முன்வைத்து பேசிய அவரது அசாதாரண பேச்சு திறமையால் வியந்த ரசிகர்கள் அவர் பேசி முடித்ததும் கட்டி தழுவி தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆன்லைனிலும் அவருக்கு உலகமுழுவதிலும் இருந்து விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டுருக்கின்றனர். அஜித் ரசிகர்கள் FACEBOOK, TWITTER வலைத்தளங்களில் கஷ்டப்பட்டு போலியான நியூஸ் உருவாக்கி, கிராபிக்ஸ் செய்து விஜயை கிண்டல் செய்ய திணறி கொண்டிருக்கும் போது தனி ஒருவனாக ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களையும் கதறவைத்த அந்த ரசிகரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இனியாவது படிப்பறிவற்ற அஜித் ரசிகமணிகள் திருந்துவார்களா என்று பார்ப்போம்.



Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

2 comments :